திடீரென பற்றி எரிந்த தீ - வானை சூழ்ந்த புகை மூட்டம் - வெளியான பகீர் காட்சி

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே தேங்காய் நார் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ராஜேந்திரபுரத்தில் ரஃபீக் என்பவருக்கு சொந்தமான தேங்காய் நார் கிடங்கு அமைந்துள்ளது. இங்கு எதிர்பாராத விதமாக தீ பற்றி எரிந்ததால், உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவலளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், போராடி தீயை அணைத்தனர். இதில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com