பூரி ஜெகநாதர் ரத யாத்திரை.. ஒடிசாவே திணற திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள்

x

ஒடிசா மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற பூரி Puri ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை விழா களைகட்டியுள்ளது.

தேரில் ஜெகநாதர், பாலபத்திரர், சுபத்ரா எழுந்தருள, திரளான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தேர்களை இழுத்துச் செல்ல உள்ளனர். வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட 3 தேர்கள், நகர வீதியில் வலம் வரும் காட்சியை கண்டு தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர். இதையொட்டி பூரி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பணி நடைபெறுகிறது. ரத யாத்திரை விழாவை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்