"எஞ்சியுள்ளவர்களும் அதிமுகவில் இணைவார்கள்" - அதிமுகவில் இணைந்த பின் புகழேந்தி பேட்டி
அமமுகவில் இருந்து விலகிய புகழேந்தி, மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.
அமமுகவில் இருந்து விலகிய புகழேந்தி, மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு, ஆதரவாளர்களுடன் வந்த அவர், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, எஞ்சியுள்ளவர்களும் விரைவில் அதிமுகவில் இணைய உள்ளதாக தெரிவித்தார்.
