வயநாடு பேரழிவிற்கு சிறுவன் கொடுத்த பெரிய தொகை.. கைகூப்பி நின்ற டீ கடை ஓனர்

நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் வயநாடு மக்களுக்கு உதவும் வகையில் புதுக்கோட்டையில் தேனீர் கடை உரிமையாளர் ஒருவர் டீ மொய் விருந்து நடத்தியது வரவேற்பைப் பெற்றுள்ளது...

மாங்கனாம் பட்டியை சேர்ந்த சிவக்குமார் மேட்டுப்பட்டி இந்திரா நகரில் டீக்கடை நடத்தி வரும் நிலையில் இவர், டீ மொய் விருந்து நடத்தியுள்ளார்... டீ கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் இலவசமாக டீ அருந்தி அங்கு வைக்கப்பட்டுள்ள மொய் பாத்திரத்தில் தங்களால் இயன்ற நிதி உதவியை அளித்து வருகின்றனர். இன்று திரட்டப்படும் இந்த நிதியானது முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது...

X

Thanthi TV
www.thanthitv.com