13 வயது சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் - பெண் மந்திரவாதி போலீசில் வாக்குமூலம் அளித்ததாக தகவல்

புதுக்கோட்டையில் 13 வயது சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண் மந்திரவாதி வாக்குமூலம் அளித்துள்ளார்.
13 வயது சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் - பெண் மந்திரவாதி போலீசில் வாக்குமூலம் அளித்ததாக தகவல்
Published on
புதுக்கோட்டையில் தனது 13 வயது மகளை பெண் மந்திரவாதியின் பேச்சை கேட்டு பெற்ற தந்தையே நரபலி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக
பெண் மந்திரவாதியிடம் போலீசார் கடந்த 5 நாட்களாக விசாரணை மேற்கொண்டதில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதில் கடந்த 18ஆம் தேதி நரபலி கொடுக்க சிறுமியை குளக்கரையில் இருந்து அழைத்துச் சென்றபோது, சிறுமி பயந்து அலறியதாவும், இதனால் சிறுமியின் வாயை மூடி கழுத்தை பிடித்து நெறித்ததில் அவர் உயிரிழந்ததாகவும் பெண் மந்திரவாதி தெரிவித்துள்ளார். இதனை மறைக்க சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது போல் சித்தரித்து விட்டு, அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றுவிட்டதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.
பெண் மந்திரவாதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மந்திரம் மற்றும் மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com