கடன் தள்ளுபடி? : வத‌ந்தியை நம்ப வேண்டாம் - அறிவிப்பு பலகைகள் வைத்து விழிப்புணர்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் கடன் தொகை, தள்ளுபடி செய்யப்பட்டதாக எழுந்த வ‌தந்தியை நம்ப வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
கடன் தள்ளுபடி? : வத‌ந்தியை நம்ப வேண்டாம் - அறிவிப்பு பலகைகள் வைத்து விழிப்புணர்வு
Published on

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் கடன் தொகை, தள்ளுபடி செய்யப்பட்டதாக எழுந்த வ‌தந்தியை நம்ப வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாவட்டம் முழுவதும், அறிவிப்பு பலகைகள், வைக்கப்பட்டுள்ளன. அதில், கடன் தொகையை செலுத்த கால அவகாசம் மட்டுமே நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் வீண் வத‌ந்திகளை நம்ப வேண்டாம் எனவும் மக்களுக்கு தெளிவு படுத்தியுள்ளனர். சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த அறிவிப்பு பலகையை, சிலர் தங்களது செல்போன்களில் படம் பிடித்து செல்கின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com