Pudukottai Murder| கந்தல் கோலமாக வெட்டி கூறு போடப்பட்ட 19 வயது இளைஞர்
புதுக்கோட்டை மாவட்டம் சந்தப்பேட்டை அருகே தினேஷ் என்ற 19 வயது இளைஞர் பயங்கர ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட தினேஷ் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கும் இவரது நண்பர்கள் மூன்று பேருக்கும் இடையே, பழைய இரும்புப் பொருட்களை விற்ற பணத்தைப் பிரிப்பதில் சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தினேஷ் அவர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நண்பர்கள் மூவரும், நேற்று தினேஷைச் சந்தப்பேட்டை பகுதிக்கு வரவழைத்துக் கொடூரமாக வெட்டிக் கொன்றனர். தகவலறிந்து வந்த நகர காவல் துறையினர், தினேஷின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். இக்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பியோடிய 3 நண்பர்களையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
