

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பண்ணை தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு பண்ணை தொழிலாளர்களுக்கு தற்போது தினக்கூலியாக 251 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தோட்டக்கலைப் பண்ணை தினக் கூலி தொழிலாளர்களுக்கு 300 ரூபாய் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தோட்டக்கலைப் பண்ணை தொழிலாளருக்கு வழங்குவது போல் தங்களுக்கும் தினக்கூலி வழங்க வலியுறுத்தி 150-க்கும் மேற்பட்டோர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.