பெட்டி கடையை சூறையாடிய குண்டர்கள்... அதிர்ச்சி காட்சிகள் | pudukottai

x

புதுக்கோட்டை அருகே, காரில் வந்த மூன்று குண்டர்கள், பெட்டி கடை உரிமையாளரை தாக்கி, கடையை சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள சுக்கிரன்விடுதி கிராமத்தில் தேவதாஸ் என்பவர் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் அப்பகுதிக்கு காரில் வந்த மூன்று குண்டர்கள், குளிர்ந்த தண்ணீர் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளனர். பின்னர் கடை உரிமையாளரான தேவதாஸை தாக்கி, கடையை சூறையாடிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்