கஜா புயலால் தண்ணீர் வரத்து அதிகரித்து 12 ஆண்டுகளுக்கு பிறகு அணைக்கட்டில் நீர் நிரம்பி உள்ளது. இருப்பினும் அணைக்கட்டில் உள்ள பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அணைக்கட்டில் உள்ள மதகுகள் பழுதடைந்ததுள்ளதால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். உடனடியாக மதகுகளை சரிசெய்து, தண்ணீரை சேமித்து வைத்து விவசாயத்திற்கு பயன்படுத்த ஏதுவாக இருக்க கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்