Pudukkottai || `என்னா மனுஷன்யா!' தொழிலாளிக்கு சிங்கப்பூர் முதலாளி செய்த நெகிழ்ச்சி செயல்
சிங்கப்பூர் முதலாளிகளை பல்வேறு இடங்களில் விளம்பர பதாகைகள் வைத்தும் சாரட் வண்டி மற்றும் குதிரைகளில் ஏற்றி ஊர்வலமாக மேளதாளங்கள் முழங்க வரவேற்று ஊரே வியந்து பார்க்க அழைத்துச் சென்ற தொழிலாளி
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள ரோஜா நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி தனலெட்சுமி. இவர்களுக்கு லட்சயா என்ற மகளும் தரணீஸ்வரன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ஆறுமுகம் சிங்கப்பூரில் உள்ள கோல்டு ஃபீல்டு கன்ஸ்ட்ரக்ஷன் பிடிஇ லிமிடெட் என்ற நிறுவனத்தில் 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வரக்கூடிய நிலையில் தற்போது ஆறுமுகம் அதே நிறுவனத்தில் சைட் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனது மகன் மற்றும் மகளுக்கு காதணி விழா நடத்த திட்டமிட்டு இருந்த ஆறுமுகம் அவரது சிங்கப்பூர் முதலாளிகளான ஷியாம் மற்றும் ஆல்பர்ட் ஆகியவரிடம் தெரிவித்து தங்கள் ஊரில் நடைபெறும் காதணி விழாவிற்கு நீங்கள் அவசியம் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
