வீட்டு வாசலில் கிடந்த தலை இல்லாத முண்டம்.. புதுக்கோட்டையில் அதிர்ச்சி | Pudukkottai

x

அறந்தாங்கி அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த உடலால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள பத்தக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேசுராஸ் .இவர் அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் வாடைக்கு குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் அவரது வீட்டின் முன் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் கிடந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார் உடைலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட நபர், பொன்னகரம் மீனவகிராமத்தை சேர்ந்த ஆதிநாராயணன் என தெரியவந்துள்ளது. இந்த கொலைச் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்