மாணவர்களை போலீசார் தாக்கியதாக புகார் : பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்

புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவர்களை போலீசார் அடித்ததாகக் கூறப்படும் புகார் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார்.
மாணவர்களை போலீசார் தாக்கியதாக புகார் : பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்
Published on

புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவர்களை போலீசார் அடித்ததாகக் கூறப்படும் புகார் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி அமைய உள்ள இடத்தை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் அரசு பள்ளிக்கு சென்ற போலீசார், அங்குள்ள மாணவர்களை அடித்ததாக கூறப்படுகிறது.இதனை கண்டித்து பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து வந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு பரபப்பு நிலவியது.

X

Thanthi TV
www.thanthitv.com