புதுக்கோட்டை : மயில்களை வேட்டையாடிய 3 பேர் கைது

புதுக்கோட்டை அருகே மயில்களை வேட்டையாடிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் மூன்று மயில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை : மயில்களை வேட்டையாடிய 3 பேர் கைது
Published on

புதுக்கோட்டை அருகே மயில்களை வேட்டையாடிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் மூன்று மயில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த அன்னவாசல் போலீசார், கார் ஒன்றை சோதனை செய்த போது, அதில் 3 மயில்கள் மற்றும் நாட்டுத் துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் பொன்னமராவதி பகுதியை சேர்ந்த பெருமாள், மூர்த்தி மற்றும் ஆறுமுகம் என்பதும், வனப்பகுதியில் அவர்கள் மயில்களை வேட்டையாடியதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். 3 பேருக்கும் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக, மாவட்ட வன உதவி அலுவலர் சங்கர் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com