மழை வெள்ளம் ஏற்பட்டால் அதில் இருந்து தப்பிப்பது எப்படி, நீர் நிலைகளில் சிறுவர்களோ மற்றவர்களோ சிக்கிக் கொண்டால் அவர்களை மீட்பது எப்படி என்பது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பாதுகாப்பு ஒத்திகை புதுக்கோட்டையில் நடைபெற்றது. காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினரால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில், தீயணைப்பு துறை சார்பில் ஒரு படகு, காவல்துறை சார்பில் ஒரு படகு என இரண்டு படகுகள் ஈடுபட்டன. இதில் காவல்துறை படகு பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டது. அதை சீர் செய்ய நீண்ட நேரம் ஆனதால், பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.