Pudukkottai | புதுக்கோட்டை அரசு முகாமில் அமைச்சரின் சகோதரர் ஆய்வு? - சர்ச்சை
Pudukkottai | புதுக்கோட்டை அரசு முகாமில் அமைச்சரின் சகோதரர் ஆய்வு? - சர்ச்சை
Pudukkottai | புதுக்கோட்டை அரசு முகாமில் அமைச்சரின் சகோதரர் ஆய்வு? - சர்ச்சை
புதுக்கோட்டையில் அரசு முகாமில் அமைச்சர் முகமது பர்வேஸின் சகோதரர் ஆய்வு செய்ததாக கூறப்படும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அரசு சேவைகள் மற்றும் நலத்திட்டங்களைப் பெறுவதற்கான பதிவு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் அமைச்சர் முகமது பர்வேஸின் சகோதரர் முகமது இப்ராஹிம் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நிர்வாகிகள் எடுத்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. அரசு பணிகளில் கட்சி நிர்வாகிகள் ஆய்வுக்கு செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது