

புதுக்கோட்டை மாவட்டம், ராப்புசல் கிராமத்தில் உடல்நலக்குறைவு காரணமாக கோயில் காளை உயிரிழந்தது. இதனைத் தொடர்ந்து இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு,பொதுமக்கள் காளையை ஊர்வலமாக தாரை தப்பட்டை முழங்க எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.இந்த ஊர்வலத்தில் சுகதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரும்,நூற்றுக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.