Pudukkottai | Doctor | வலியால் அலறி துடித்த சிறுமி கடவுளாக மாறி உயிரை காப்பாற்றிய டாக்டர்

x

வலியால் அலறி துடித்த சிறுமி கடவுளாக மாறி உயிரை காப்பாற்றிய டாக்டர்

கட்டுவிரியன் பாம்பு கடித்த 6 வயது சிறுமியை காப்பாற்றிய மருத்துவர்கள்

அதிக விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு கடித்தது தெரியாமல், வயிற்று வலி என ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட 6 வயது சிறுமியை துரீதமாக செயல்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

குளவாய்பட்டி கிராமத்திலிருந்து 6 வயது சிறுமியை என்ன பிரச்சனை என்று தெரியாமல் அவரது பெற்றோர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் கேட்டதற்கு வயிற்று வலி என பதிலளித்துள்ளனர். ஆனால், சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், கட்டுவிரியன் பாம்பு கடித்ததை கண்டுபிடித்து விஷ முறிவு மருந்துகளை உடனடியாக வழங்கினர். தொடர்ந்து ஒரு வாரம் 15 முறை விஷ முறிவு மருந்தை அளித்த பிறகு சிறுமி குணமடைந்தார்.


Next Story

மேலும் செய்திகள்