தேவர் ஜெயந்தியையொட்டி மாட்டுவண்டி பந்தயம் : போட்டியை கண்டு ரசித்த ஆயிரக்கணக்கான மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தேவர் ஜெயந்தியை ஒட்டி, மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
தேவர் ஜெயந்தியையொட்டி மாட்டுவண்டி பந்தயம் : போட்டியை கண்டு ரசித்த ஆயிரக்கணக்கான மக்கள்
Published on

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தேவர் ஜெயந்தியை ஒட்டி, மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு மற்றும் சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற, இந்த போட்டியில் சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களை சேர்ந்த 56 ஜோடி மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டு வண்டி பந்தயம் திருமயத்தில் துவங்கி வி.லட்சுமிபுரம் வரையிலும், சிறிய மாட்டு வண்டி பந்தயம் பெருந்துறை வரையிலும் நடைபெற்றது. இதனை ஆயிரக்கணக்கானோர் சாலையின் இருபுறமும் நின்று கண்டுரசித்தனர். இறுதியில் வெற்றிபெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பணமும், கேடயமும் பரிசாக வழங்கப்பட்டன.

X

Thanthi TV
www.thanthitv.com