

புதையல் வேட்டைக்காக நரபலி கொடுக்கப்பட்ட, தனது மகளின் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என சிறுமியின் தாய் உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார். தனது மகளுக்கு நேர்ந்த கொடுமை வெறெந்த குழந்தைகளுக்கும் ஏற்படக் கூடாது எனக் கேட்டுக்கொண்ட இந்திரா, அதற்கு உண்டான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இந்த சம்பவமே கடைசியாக இருக்க வேண்டும் என மகளை பறிகொடுத்த அவர் வலியுறுத்தியுள்ளார்.