Puducherry | வேலை நேரம் இரவு 10 மணி வரை நீட்டிப்பு - வெளியான அறிவிப்பு
புதுச்சேரியில் பெண்களின் வேலை நேரம் இரவு 10 மணி வரை நீட்டிக்கபடுவதாக தொழிலாளர் துறை அறிவித்துள்ளது. பெண்களின் வேலை நேரம் நீட்டிப்பு தொடர்பாக புதுச்சேரி மாநில தொழிலாளர் துறை செயலர் ஸ்மிதா அறிக்கை வெளியிட்டுள்ளார். புதுச்சேரியில் பெண்கள் இரவு ஷிப்டுகளில் இரவு 7 மணி வரை மட்டுமே வேலை செய்து வருகின்றனர். தற்போது அந்த வேலை நேரம் இரவு 10 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் இரவு நேரப் பணிகளின் போது பெண்களின் வேலைவாய்ப்பு மற்றும் வேலை தொடர்பான நெகிழ்வுத்தன்மையை அதிகரித்துள்ளது.
பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனைப் பேணுவதோடு, சம வாய்ப்புகளை ஊக்குவித்தல், பாலின சமத்துவத்தை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Next Story
