புதுச்சேரி விஜய் மீட்டிங் | தீயாய் பரவிய வீடியோ | தேடிவந்த பாராட்டு

x

விஜய் கூட்டத்தில் பாதுகாப்பு பணி - எஸ்.பி. ஈஷா சிங்கிற்கு பாராட்டு

புதுச்சேரியில் விஜய் பங்கேற்ற‌ தவெக பொதுக்கூட்டத்தில் அசம்பாவிதம் நடக்காமல் சிறப்பாக செயல்பட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ஈஷா சிங்-கிற்கு, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

கரூர் தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான பிறகு, முதல்முறையாக கடந்த செவ்வாய்க்கிழமை புதுச்சேரியில் திறந்தவெளி பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்த காவல் கண்காணிப்பாளர் இஷா சிங்‌ நுழைவு வாயிலிலேயே நின்று கொண்டு தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்தை கடுமையாக சாடினார்.

இந்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவிய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ஈஷா சிங்-கை ஏராளமானோர் வெகுவாக பாராட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்