Puducherry | Resto Bar | `விடுதிகளில் இல்லீகல் சம்பவங்கள்..’ - அதிரடியாக இறங்கிய போலீஸ்

Puducherry | Resto Bar | `விடுதிகளில் இல்லீகல் சம்பவங்கள்..’ - அதிரடியாக இறங்கிய போலீஸ்

#Puducherry #RestoBar #ClubHouse #ThanthiTV Puducherry | Resto Bar | `விடுதிகளில் இல்லீகல் சம்பவங்கள்..’ - அதிரடியாக இறங்கிய போலீஸ் புதுச்சேரியில் நடனத்துடன் கூடிய கேளிக்கை விடுதிகள் மற்றும் ரெஸ்ட்ரோ பார்களில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் நள்ளிரவில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்றது. விடுதிகளின் அறைகள், நடன அரங்குகள், சமையலறைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தினர். மேலும், விதிகளை மீறி போதைப்பொருட்கள் விற்பனை செய்தாலோ, அரசு நிர்ணயித்த கட்டுப்பாடுகளை மீறிச் செயல்பட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். இதுதொடர்பான சோதனைக் காட்சிகளையும் போலீசார் வெளியிட்டுள்ளனர். வார இறுதி நாட்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் சோதனை தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

X