"ஞாபகம் வருதே ஞாபகம் வருதே.." - நினைவுகளை நினைத்து நெகிழ்ந்த புதுச்சேரி CM

"ஞாபகம் வருதே ஞாபகம் வருதே.." - நினைவுகளை நினைத்து நெகிழ்ந்த புதுச்சேரி CM
Published on

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி முதன் முதலில் வாங்கிய

அம்பாசிடர் காரினை புதுப்பித்து அதில் அமர்ந்து ரசித்துள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி 1991இல் தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து 33 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். இருசக்கர வாகனத்தில்

அதிகம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ள ரங்கசாமி தனது யமஹா ஆர்.எக்ஸ் 100 பைக்கில் சென்று நாடாளுமன்ற தேர்ததில் வாக்களித்தார். 1997இல் முதன் முறையாக அவர் வாங்கிய அம்பாசிடர் கார் பழுதடைந்து மிக மோசமான நிலையில் இருந்த நிலையில், அதை சீர் செய்ய தூத்துக்குடியில் உள்ள ஒரு பணி மணிக்கு அனுப்பி வைத்தார். தற்போது அந்த அம்பாசடர் கார் சீர் செய்யப்பட்டு புது பொலிவுடன், முதலமைச்சர் இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது. அப்போது அதனை கண்ட முதலமைச்சர் ரங்கசாமி ஆசையுடன் அதில் அமர்ந்து ரசித்தார். இனி

புதுப்பிக்கப்பட்ட இந்த காரில் அவர் உள்ளூரில் பயணிக்க உள்ளதாக கூறப்படுகிறது

X

Thanthi TV
www.thanthitv.com