சமையல் எரிவாயு சிலிண்டர் விலையேற்றத்தை கண்டித்து, புதுச்சேரியில் மகளிர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். காமராஜர் சிலை அருகே கூடிய அவர்கள், சிலிண்டருக்கு மாலை அணிவித்து, இறுதி அஞ்சலி செலுத்தினர். இந்த, நூதன போராட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமியும் பங்கேற்றார்.