"பசங்களா பட்டம் வாங்க இந்த டிரஸ்ல தான் வரணும்" அதிரடியாக அறிவித்த புதுச்சேரி ஜிப்மர்

x

"பசங்களா பட்டம் வாங்க இந்த டிரஸ்ல தான் வரணும்"

அதிரடியாக அறிவித்த புதுச்சேரி ஜிப்மர்

வாய் பிளக்கும் மாணவர்கள்

புதுச்சேரி ஜிப்மர் பட்டமளிப்பு விழா - பாரம்பரிய ஆடை கட்டாயம்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற உள்ள மருத்துவ மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்ட தகவலில், ஆண்களுக்கான இந்திய பாரம்பரிய உடை என வெள்ளை நிற முழுக்கை சட்டையுடன் பைஜாமா அல்லது வெள்ளை நிற வேட்டி அணிந்து கருப்பு அல்லது பிரவுன் ஷூ அணிந்து வரவேண்டும். செருப்புகள், ஸ்னீக்கர் அணிந்து வரக்கூடாது என கூறப்பட்டு உள்ளது. இதேபோல, பெண்களுக்கான இந்திய பாரம்பரிய உடை என தங்க நிற பார்டருடன் கூடிய வெள்ளை நிற சேலை, தங்க நிற ஜாக்கெட் அல்லது தங்க நிற பார்டருடன் கூடிய வெள்ளை நிற முழுக்கை சுடிதார் அல்லது சல்வார் கமீஸ் அணியலாம் எனவும், காலணிகளை பொறுத்தவரை நடக்கும்போது சத்தம் எழுப்பாத செருப்புகளை அணியலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்