சிரித்ததால் நேர்ந்த பயங்கரம்.. ஹோட்டல் ஓனரை நடுங்கவிட்ட பிரதான கட்சி புள்ளியின் மகன்
புதுச்சேரி திருபுவனை ஓட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருபுவனையில் ராகுல் என்பவரது ஓட்டலின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் திமுக பிரமுகரின் மகன் சபரி, அவரது நண்பர் பிரபாகரன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மாமனார் திட்டிய போது, ஓட்டல் உரிமையாளர் ராகுல் தன்னை பார்த்து சிரித்ததின் காரணமாக, ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக குற்றவாளி சபரி வாக்குமூலம் அளித்துள்ளார்.
Next Story
