Puducherry | கார்டு இன்றியே பணம் எடுக்கும் ATM - புதுவை அரசு பள்ளி மாணவிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு
புதுச்சேரி சோரப்பட்டு அரசு பள்ளி மாணவிகள், அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் ஏடிஎம் இயந்திரத்தை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். ஏடிஎம் இயந்திரத்தை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து மாணவிகள், ஜெயப்பிரியா, கங்காதேவி, பவஸ்ரீ, மோஷிதா, நந்தினி ஆகியோர் விளக்கம் அளித்தனர். மேம்பட்ட ஏடிஎம் அமைப்பு, அதிநவீன பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தை ரோபோடிக் குரல் தொடர்புடன் இணைத்து, பாதுகாப்பான, வசதியான பரிவர்த்தனை அனுபவத்தை வழங்கும் என மாணவிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Next Story
