

கடந்த சில நாட்களாக திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே முகாமிட்டுள்ள சின்னத்தம்பி யானை, விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. யானையை காட்டுக்குள் அநுப்ப முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர். இதுஒருபுறம் இருந்தாலும், யானை செல்லும் இடங்களில் எல்லாம் அதனைக் காண, அங்கு பொதுமக்கள் திரண்டு வருகின்றனர். இதனால் பழங்கள், ஐஸ் மற்றும் டீ விற்கும் வியாபாரிகள் பயனடைந்து வருகின்றனர்.