Chengalpattu News| செங்கல்பட்டு அருகே சிறை பிடித்து பொதுமக்கள் ஆவேசம்

செங்கல்பட்டு அருகே சிறை பிடித்து பொதுமக்கள் ஆவேசம்

#garbagetruck #chengalpattunews செங்கல்பட்டு அருகே பச்சையம்மன் கோவில் பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி குப்பை லாரிகள் பொதுமக்கள் சிறைப்பிடித்த‌தால் பரபரப்பு ஏற்பட்ட‌து. செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் பச்சையம்மன் கோவில் பின்புறம் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, போலீசார் மற்றும் நகராட்சி ஆணையர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது

X

Thanthi TV
www.thanthitv.com