"திட்டமிட்டபடி பொதுத்தேர்வு நடைபெறும்" - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உறுதி
"திட்டமிட்டபடி பொதுத்தேர்வு நடைபெறும் பயப்படாமல் பொதுத்தேர்வினை எதிர்கொள்ளுங்கள்"- மாணவர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்
பொதுத்தேர்வினை மாணவர்கள் தங்களின் திருப்திக்காக எழுத வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார். தஞ்சாவூர் அருகே தோழகிரிபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், சீர்மிகு அங்கன்வாடி மையம் மற்றும் நூலகத்தினை அவர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,
திட்டமிட்டபடி பொதுத் தேர்வு நடைபெறும் என்றும், மாணவர்கள் பயப்படாமல் தங்களின் மனநிலைக்கு ஏற்றவாறு தேர்வினை எழுத வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்
