சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு - டிராபிக் ராமசாமியுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

திருப்பூரில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டதுடன், சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு - டிராபிக் ராமசாமியுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
Published on

திருப்பூரில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டதுடன், சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது பொதுமக்களில் சிலர் அவருக்கு ஆதரவாகவும் சிலர் அவருக்கு எதிராகவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாகன சோதனையின் போது தன் மீது ஒரு வாகன ஓட்டி இடிக்க வந்ததாகவும், அதை போலீசார் கண்டுகொள்ளவில்லை என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்ட அவர், சிறிது நேரம் கழித்து வாகனங்களுக்கு வழிவிட்டுவிட்டு நடுரோட்டில் அமர்ந்து கொண்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com