PT Period| வாரத்தில் 3 நாட்கள் PT பீரியட் கட்டாயம் - தமிழகம் முழுக்க பள்ளிகளில் பீரியட்களில் மாற்றம்

வாரத்தில் 3 நாட்கள் PT பீரியட் கட்டாயம் - தமிழகம் முழுக்க பள்ளிகளில் பீரியட்களில் மாற்றம்

வாரத்தில் 3 நாட்கள் PT பீரியட் கட்டாயம் - தமிழகம் முழுக்க பள்ளிகளில் பீரியட்களில் மாற்றம்

#ptperiod #tnschoolperiodchange #rajmohan

திருத்தப்பட்ட பள்ளி கால அட்டவணை அமல் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திருத்தப்பட்ட பள்ளி கால அட்டவணை அமலுக்கு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கான புதிய கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஏற்கனவே வெளியிட்டிருந்தார். அதன்படி, காலை 9.30 மணி முதல் மாலை 4.10 மணி வரை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஒரு பாடவேளை 90 நிமிடங்களாகவும், 6 முதல் 10-ம் வகுப்பு வரை 45 நிமிடங்களாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 10-ம் வகுப்பு வரை வாரத்தில் 3 நாட்கள் உடற்கல்வி வகுப்புகள் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும். மேலும், இசை, கலை, கைவினை, நூலகம், செயற்கை நுண்ணறிவு மற்றும் இணையவழிக் கல்விக்கும் பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கு கூடுதல் பாடவேளை வழங்கப்பட்டுள்ளதுடன், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்தில் 2 உடற்கல்வி வகுப்புகளும், 2 கல்வி இணைச் செயல்பாட்டு வகுப்புகளும் இடம்பெற்றுள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com