சுடுகாட்டு பாதையை மீட்டுதர கோரிக்கை - இறந்தவர் சடலத்துடன் இரவு முழுவதும் போராட்டம்

சுடுகாட்டு பாதையை மீட்டுத் தரக் கோரி சடலத்துடன் இரவு முழுவதும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சுடுகாட்டு பாதையை மீட்டுதர கோரிக்கை - இறந்தவர் சடலத்துடன் இரவு முழுவதும் போராட்டம்
Published on

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவைச் சேர்ந்த பூவலை கிராமத்தை சேர்ந்த முத்தையால் என்ற கூலி தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து உறவினர்கள், அவர் உடலை அடக்கம் செய்ய கொண்டு சென்ற போது, சுடுகாட்டிற்கு செல்லும் பாதையில் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால், அப்பகுதியை சேர்ந்த இருளர் இன மக்கள்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையின்போது, கும்மிடிப்பூண்டி தாசில்தார் செந்தாமரை செல்விக்கும், அங்கிருந்த கட்சி பிரமுகர் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், மக்கள் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com