Protest | திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் திடீர் பரபரப்பு - உடனே குவிந்த போலீஸ்

திருச்சி அருகே கோவில் திருவிழாவை நடத்த கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட‌தால், கரூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட‌து. திருச்சி, கொடியாலம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவை நடத்துவதில் இரு சமூகத்தினர் இடையே தகராறு ஏற்பட்ட‌தால் கோயில் திருவிழா தடைபட்டுள்ளது. திருவிழாவை உடனடியாக நடத்த வலியுறுத்தி கிராம மக்கள் இன்று திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட‌து. காவல்துறையினரும் வட்டாட்சியரும் பேச்சுவார்த்தை நடத்தினர். திருவிழாவை நடத்த எழுத்துப்பூர்வமாக அனுமதி வழங்கினால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவோம் என வலியுறுத்தி தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com