கோவில்பட்டி : முதலமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மாநில காங்கிரஸ்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிம் மாநில காங்கிரஸ் கட்சியினர் தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி : முதலமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மாநில காங்கிரஸ்
Published on
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், தமிம் மாநில காங்கிரஸ் கட்சியினர், தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தி, கோவில்பட்டி தலைமை தபால் அலுவலகம் முன்பு இந்த போராட்டம் நடைபெற்றது. 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கை அடங்கிய ஆயிரம் தபால்களை முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் கோவில்பட்டி எம்எல்ஏவும், அமைச்சருமான கடம்பூர் ராஜூ ஆகியோருக்கு அனுப்பி வைத்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com