Protest | பாஜக நிர்வாகிக்கு எதிராக போராட்டத்தில் குதித்த அதிமுக கவுன்சிலர்கள் நாகர்கோவிலில் பரபரப்பு
நாகர்கோவில் அருகே பேரூராட்சி அலுவலகத்தில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள 2 தேக்குமர பீரோக்கள் எப்படி மாயமானது எனக் கேட்டு, அதிமுகவை சேர்ந்த 2 பெண் கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கணபதிபுரம் பேரூராட்சி தலைவராக பாஜகவை சேர்ந்த ஸ்ரீவித்யா என்பவர் உள்ள நிலையில், அலுவலகத்தில் இருந்த 2 தேக்கு மர பீரோகள் மாயமானதாக கூறப்படுகிறது. அவற்றை கண்டுபிடித்துத் தரக்கோரி நிர்வாக அதிகாரி காவல் நிலையத்திற புகார் கொடுத்து உள்ளார். இந்த சூழலில், பீரோக்கள் மாயமானதை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் பூமதி மற்றும் கலைச்செல்வி ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story
