அனகாபுத்தூர் மக்களுக்கு வீடு வழங்க எதிர்ப்பு - சென்னை பெரும்பாக்கத்தில் இரவில் பரபரப்பு
சென்னை பெரும்பாக்கத்தில் மாற்று வீடுகள் வழங்குவதில் இழுபறி நீடித்ததால், பொதுமக்கள் பரிதவித்தனர். அனகாபுத்தூரில் இடிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்களுக்கு 40 டோக்கன் வழங்கி பெரும்பாக்கத்தில் குடியேற அறிவுறுத்தப்பட்டனர். உடைமைகளோடு அங்கு சென்ற மக்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படாததால், சாலையிலேயே காத்திருந்தனர். ஏற்கனவே அங்கிருந்த மக்கள் அனகாபுத்தூர் மக்களுக்கு வீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெண் உதவி ஆய்வாளர் யோகலட்சுமி, இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். ஒரு வழியாக உடன்பாடு ஏற்பட்டு ஒரு பிளாக் ஒதுக்கப்பட்டது.
Next Story
