வீட்டை இடிக்க எதிர்ப்பு - தம்பதி தீக்குளிக்க முயற்சி

x

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே, வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, வயதான தம்பதி அதிகாரிகள் கண்முன்னே தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வெள்ளக்கவுண்டம்பட்டி என்ற இடத்தில், தெருவை ஆக்கிரமித்து கட்டியதாக, வீட்டின் ஒரு பகுதியை நீதிமன்றம் உத்தரவுப்படி அதிகாரிகள் இடிக்க வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜேசு - அமிர்தா தம்பதியினர் தீக்குளிக்க முயன்றனர். உடனே போலீசார் அவர்கள் கையில் இருந்த மண்ணெண்ணெயை பறித்து, அசம்பாவிதத்தை தடுத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்