எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு - விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்

சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மேல்வணக்கம்பாடி பகுதியில் விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு - விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்
Published on

சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மேல்வணக்கம்பாடி பகுதியில் விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்திட்டத்திற்காக தங்களது நிலத்தை எந்த நிலையிலும் விட்டு தர மாட்டோம் என்றும், சுற்று சூழுல் தாக்க மதிப்பீடு வரைவு திட்டத்தை திரும்ப பெற கோரியும் விவசாயிகள் முழக்கங்கள் எழுப்பினர்

ஒரு வாரத்தில் ஒரு குடும்பமே பலியான சோகம்

கொரோனா சோதனைக்கு பின் தனிமைபடுத்தப்பட்டதால் அடுத்த‌டுத்து ஒரு குடும்பமே உயிரிழந்த சோகம் தேனியில் அரங்கேறியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, டி.சுப்புலாபுரம் கிராமத்தை சேர்ந்த ச‌சிக்குமார் கொரோனா சோதனைக்கு பின் தனிமைபடுத்தப்பட்டதால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை தொடர்ந்து அவரது தாய் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், தற்போது அவரது தந்தை மணிகண்டன், மற்றொரு மகன் வச‌ந்த் ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

ரூ.16 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுக்கள் பறிமுதல் - 4 பேர் கைது-போலீசார் விசாரணை

தென்காசி ரயில்வே மேம்பாலத்தின் கீழ் சந்தேகப்படும்படியாக நின்ற நான்கு பேரிடம் சோதனையிட்ட போலீசார், கத்தை கத்தையாக கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முகமது பாதுஷா, வீரகேசவ சொக்கலிங்கம், மாரி செல்வராஜ் மற்றும் சாமிநாதன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை :எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது - மத்திய அரசு

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதனை தொடர்ந்து, வரைவு அறிக்கைக்கு தடை கோரிய வழக்கு செப்டம்பர் 8ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து இடிக்கப்பட்ட கோவில் சுவர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் அருகே உள்ள வானமாமலை ஜீயர் மடத்தை தற்போது குத்தகைக்கு எடுத்துள்ள குத்தகைதாரர்கள் தங்கும் விடுதியை வியாபார நோக்கில் மாற்றி அங்கு கடை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதற்காக பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி கோவில் ஆடிப்பூர மண்டபத்தில் உள்ள சுவர் இடிக்கப்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com