வெளிநாட்டு அழகிகளை வைத்து விபச்சாரம் : இளைஞர் கைது...

சென்னையில் ரஷ்ய நாட்டு அழகியை வைத்து பாலியல் தொழில் செய்த அடுக்குமாடி குடியிருப்பின் மேலாளரை போலீசார் கைது செய்தனர்
வெளிநாட்டு அழகிகளை வைத்து விபச்சாரம் : இளைஞர் கைது...
Published on
சென்னை தியாகரய நகர் ரங்கநாதன் தெரு அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விபச்சாரம் நடப்பதாக ,விபச்சார தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது, விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக சோதனை நடத்திய போது அங்கு வெளிநாட்டு அழகிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து குடியிருப்பின் மேலாளர் லோகேஷை கைது செய்த போலீசார், அழகிகளை அங்கிருந்து மீட்டு மயிலாப்பூர் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.இந்தியாவில் சுற்றிபார்ப்பதற்காக வெளிநாட்டு பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் லோகேஷ் ஈடுபடுத்த்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் வெளிநாட்டு அழகிகளை வைத்து பாலியல் தொழில் செய்த தரகர் உள்ளிட்ட 3 பேரை போலிசார் தேடி வருகின்றனர்
X

Thanthi TV
www.thanthitv.com