ஈரோட்டில் சங்கமஸ்வரர் கோயில் யானைக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அங்குள்ள யானை வேதநாயகிக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டு அவதிப்பட்டு வருவதாக விலங்குகள் ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், யானையை பரிசோதித்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என அவர் கோரியிருந்தார். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நோய்வாய்ப்பட்டுள்ள கோயில் யானை வேதநாயகியை பரிசோதனை செய்து தேவையான சிகிச்சை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.