

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த ஒய்வு பெற்ற ஆசிரியர் ராமச்சந்திரன் நேபாளம் வழியாக கைலாய மானசரோவருக்கு புனித யாத்திரை சென்ற போது, அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
அவரது உடல் காட்மண்டுவில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின் விமானம் மூலம் நேற்று நள்ளிரவு சென்னை கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ராமச்சந்திரனின் உடலை அவரது உறவினர்கள் வேன் மூலம் சொந்த ஊரான ஆண்டிப்பட்டிக்கு கொண்டு சென்றனர். அங்கு இறுதி சடங்கு நடைபெற உள்ளது.