இன்ஸ்டா காதலர்களுக்கு வந்த பிரச்சனை - சட்டப்படி கிடைத்த தீர்வு

x

Insta Love | இன்ஸ்டா காதலர்களுக்கு வந்த பிரச்சனை - சட்டப்படி கிடைத்த தீர்வு

இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல் - காவல்நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

தர்மபுரியில் இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி, பாலக்கோடு மகளிர் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. மாரண்டஅள்ளி அடுத்த சீரியம்பட்டி கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரியான அருள்குமார் என்பவரும், கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் அடுத்த அரசம்பட்டியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் ஆகி, காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, வீட்டை விட்டு வெளியேறி ஓசூரில் உள்ள முருகன் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்பு, பெற்றோருக்கு பயந்து பாலக்கோடு மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு இருவரும் தஞ்சமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த, பெண் வீட்டார் தரப்பில் இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, போலீசார் இளம்பெண்ணை அவரது விருப்பத்தின்படி, அவரது கணவருடன் அனுப்பிவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்