அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இலவச கல்வி திட்டத்தின் கீழ் சேரும் குழந்தைகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
Published on

இலவச கல்வி திட்டத்தின் கீழ் சேரும் குழந்தைகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜூ உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி திட்டத்தின்கீழ் சேரும் குழந்தைகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி நிஷா பானு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இலவச கல்வி திட்டத்தின் கீழ் சேரும் குழந்தைகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தனியார் பள்ளிகள் விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழகத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் குறித்து உரிய விசாரணை நடத்தி, தேவைபட்டால் உரிமத்தை ரத்து செய்து , பள்ளியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

6 முதல் 14 வயது வரை உள்ள மாணவர்களின் கல்வி பாதிக்கால் இருப்பதை மத்திய ,மாநில அரசுகள் உறுதிபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கினை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com