மாற்றுத்திறனாளி மகளை சேர்க்க மறுக்கும் தனியார் பள்ளிகள் - தந்தை புகார்
மாற்றுத்திறனாளி மகளை சேர்க்க மறுக்கும் தனியார் பள்ளிகள் - தந்தை புகார்
வேலூரில், தனது மாற்றுத்திறனாளி மகளுக்கு, தனியார் பள்ளிகளில் இடம் கொடுக்க மறுப்பதாக ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை புகார் அளித்துள்ளார். சட்டீஸ்கரில் சிஆர்பிஎப் வீரராக பணியாற்றி வரும், வேலூர் சித்தேரியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர், 80 விழுக்காடு மாற்றுத்திறனாளியான இளைய மகள் இசைபிரியாவை 6ஆம் வகுப்பில் சேர்க்க முயற்சித்தபோது, 3 தனியார் பள்ளிகள் சேர்க்க மறுப்பதாக, குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளியிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி கூறினார்.
Next Story
