கட்டணம் செலுத்தாததால் வெளியேற்றப்பட்ட மாணவர் - மாற்று சான்றிதழ் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

விழுப்புரம் அருகே கல்வி கட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட மாணவர், அரசு பள்ளியில் சேர்ந்து படிக்க மாற்று சான்றிதழ் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கட்டணம் செலுத்தாததால் வெளியேற்றப்பட்ட மாணவர் - மாற்று சான்றிதழ் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
Published on
கருவேப்பிலைபாளையம் கிராமத்தை சேர்ந்த மாணவர் அளித்துள்ள மனுவில், சேந்தமங்கலம் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்ததாகவும், பணம் செலுத்தாததால் பள்ளி நிர்வகாத்தால் வெளியேற்றப்பட்டதாகவும் கூறியுள்ளார். இதனால் கடந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுத முடியவில்லை என்றும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அரசு பள்ளியில் சேர முடிவெடித்து ஏற்கனவே படித்த தனியார் பள்ளியில் மாற்று சான்றிதழ் கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் நிலுவை தொகை செலுத்தாமல் மாற்றுச்சான்றிதழ் தர இயலாது என பள்ளி நிர்வாகம் மறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே படிப்பை தொடர எனது பள்ளி மாற்று சான்றிதழை தனியார் பள்ளியிடம் இருந்து பெற்றுத்தருமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com