தனியார் பள்ளி மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தனியார் பள்ளியில் படிக்கும் 11-ம் வகுப்பு மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி
மாடியிலிருந்து குதித்த மாணவி படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை
தனியார் பள்ளியில் மாணவி இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை – தற்கொலையா?? விபத்தா??போலீசார் விசாரணை
பரபரப்பு சம்பவம்
செய்தி எடுக்க வந்த பத்திரிக்கையாளரிடம் மேலே வாங்க என்ன வேண்டுமானாலும் பேசிக்கலாம் என்ன எடுக்க போறீங்க லஞ்சம் கொடுக்க டீல் பேசிய தனியார் பள்ளி உரிமையாளர்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் அமைந்துள்ள குட்வில் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி இன்று காலையில் 7. 30 பள்ளிக்கு வந்த மாணவி சுமார் ஒரு எட்டு மணி அளவில் வகுப்பறை நடந்து கொண்டிருந்தத போது அப்பொழுது பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.இதில் பலத்த காயம் அடைந்த மாணவி சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர்
ஒன்பது மணிக்கு திறக்க வேண்டிய பள்ளியை 7:30 மணிக்கு திறப்பதற்கு என்ன காரணம் மேலும் மாணவிகளுக்கு அதிக பணிச்சுமையை கொடுப்பது காரணமாக இருக்குமா? தற்போது தான் பள்ளி திறந்து உள்ளது திறந்த உடனே ஸ்பெஷல் கிளாஸ் என்ற பெயரில் தனியார் பள்ளிகள் மாணவிகளுக்கு அதிகமாக சுமையை கொடுப்பதனால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்குமா?? இல்ல வேறேனும் வீட்டில் பிரச்சனை எதுவும் நடந்திருக்குமா?? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இருப்பினும் தனியார் பள்ளிகளில் அதிகாலைகளையே மாணவிகளுக்கு ஸ்பெஷல் கிளாஸ் என்ற பெயரில் வைத்து மாணவிகளுக்கு அதிக அழுத்தம் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
மேலும் இதுகுறித்து பள்ளியின் உரிமையாளர் பூமிநாதன் பேசுகையில் நீங்க உள்ள போய் எடுக்கக் கூடாது நீ எல்லாம் என்னத்த போய் எடுக்க போறீங்க போலீஸ் கத்தியை வைத்து தோண்டி எடுத்துட்டு போயிட்டாங் உள்ள வாங்க மேல போய் என்ன வேணுமோ பேசிக்கலாம் என்று பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்த கல்வி உரிமையாளர்
