Private Hospital | அரசு அதிகாரி மரணம் - சூறையாடப்பட்ட பிரைவேட் ஹாஸ்பிடல்
அரசு அதிகாரி மரணத்தால் சூறையாடப்பட்ட பிரைவேட் ஹாஸ்பிடல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த சந்தைப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில், மருத்துவரின் அலட்சியதால் அரசு அதிகாரி உயிரிழந்ததாக எழுந்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ஆயுப்கான், நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளிக்காமல் தாமதம் காட்டியதாக கூறப்படுகிறது...இதனால் ஆத்திரம் அடைந்த உயிரிழந்தவரின் உறவினர்கள் முருத்துவமனையில் இருந்த கண்ணாடி சட்டத்தை உடைத்து முற்றுகையிட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்
Next Story
