"தவறான சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை" - குடும்பத்தினர் பரபரப்பு குற்றச்சாட்டு

நாகர்கோயிலில் காய்ச்சலுக்காக சிகிச்சைக்குச் சென்ற தனியார் மருத்துவமனையில், தவறுதலாக சிகிச்சை அளிக்கப்பட்டதாக, குழந்தையின் குடும்பத்தினர் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளனர்.

தேரேக்கால் பகுதியை சேர்ந்த தனிஷ் - ஷைனி தம்பதியினர் 3 வயது ஆண் குழந்தை, காய்ச்சல் காரணமாக, நாகர்கோவிலில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார்.

அப்போது குழந்தைக்கு வெறிநாய்க்கடிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் உயர் சிகிச்சை அளித்தனர். குழந்தையின் நிலைமை மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள், வெறிநாய் கடிக்கான தடயம் இல்லை எனவும், எலி காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக குழந்தைக்கு தேவையான அனைத்து சிகிச்சையும் துரித நிலையில் செய்ததால்,

உடல்நிலை படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனை தவறாக சிகிச்சை அளித்ததாக குழந்தையின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com